விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்தேன். நகரத்தில் இருந்து கிராமத்துக்கு
வந்ததுமே ஒரு இம்புரியாத மகிழ்ச்சி. ஆறுகள், வயல்கள், பச்சை பசேல் மரங்கள், உயர்ந்த
மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம் வரிக்கும் பசுமையான வயல்வெளிகள் என கிராமத்தின்
ஒவ்வொரு நிகழ்வுகளும் மனதுக்கு இதம் தருவதாக இருந்தது. நான் பேருந்திலிருந்து
இறங்கி வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது வழியில் சில யானைகளை அவற்றின்
முன்னங்காலில் சிறிய கயிறுகள் உதவியோடு மரத்தில் கட்டி வைத்திருந்தனர். அந்த யானைகளால்
எந்த நேரத்திலும் தங்களை கட்டி வைத்திருக்கும் கயிறை உடைத்து வர முடியும் .
ஆனாலும் அது தப்பிப்பதற்க்கு எந்த வித முயற்ச்சியும் செய்யாமல் ஒரே இடத்தில்
இருந்தது எங்க்கு ஆச்சரியமாய் இருந்தது.
ஓவ்வொரு யானைகளின் பக்கத்திலும் அவைகளை வழிநடத்த ஒவ்வொரு பாகன்கள்
நின்றுகொண்டிருந்தனர். யானைகள் கட்டியிருந்த
சிறிய கயிற்றை மட்டும் அறுத்துக்கொண்டு செல்ல எந்த முயற்சியும்
மேற்கொள்ளாததற்கான காரணத்தை ஒரு யானைப் பாகனிடம் கேட்டேன். இதற்காக யானைக்கு
ஏதாவது சிறப்பு பயிற்ச்சி கொடுக்கப்படுகிறதா என்றும் கேட்டேன்.
இந்த யானைகளுக்கு எந்த சிறப்புப் பயிற்ச்சியும் இது சம்மந்தமாக
வழங்கப்படவில்லை. யானைகள் சிறு வயதாக இருக்கும் போது அவைகள் உருவத்தில்
சிறியதாகவும் அவைகளை ஒரு
இடத்தில் கட்டிப்போட ஒரு சிறிய அளவு கயிறே போதுமானது. அந்த வயதில் அவைகளை வழிநடத்த
அந்த சிறு கயிறே போதுமானதாக இருந்தது. சிறு வயதில் யானைகளுக்கு அவைகளை அறுக்க
இயலாது. யானைகள் வளர வளர அந்த சிறிய கயிற்றை அறுக்க இயலாது தங்களால் என்று எண்ணி வளர்கின்றன.
இப்போது யானைகள் மிகப் பெரிய மிருகமாக வளர்ந்தாலும் மனதளவில் அந்த சிறிய சகயிற்றை
உடைக்க இயலாது என்று எண்ணுகிறது. எனவே அவைகள் இந்த சிறிய கயிற்றை உடைக்க எந்த
முயற்சியையும் எடுப்பதில்லை என்று ஒரு யானைப் பாகன் கூறினான்.
யானைகள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் தன் காலில் கட்டப்பட்டுள்ள கயிறை
உடைத்துக்கொண்டு வெளியே வரலாம். ஆனால் தன்னால் அந்த கயிற்றை உடைக்க முடியாது என்ற
எண்ணம் அவைகளை சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. எது போல நம்மில் பலர் என்னால்
முடியாது என்ற எண்ணத்தை மனதுக்குள்ளே வளர்த்துக்கொண்டு தங்களுடைய குறிக்கோளை அடைய
திணறிக்கொண்டிருப்பர். நாம் எப்போதாவது ஒரு முறை தோல்வியடைந்தது காரணத்தால்
யானைகள் போல நம்மால் வெற்றியடைய முடியாது என்று நினைக்கிறோம். தோல்வி கற்றல்
பகுதியாகும். நாம் வழ்க்கையில் போராட்டத்தை கைவிடக்கூடாது. தோல்வி கற்றல் பகுதியாகும். நாம் வாழ்க்கையில் போராட்டத்தை கைவிட கூடாது.
