பதில் தெரியாத கேள்விகள்


நகரின் மத்தியில் நின்ற அந்த நூற்று ஐம்பது வயதுடைய ஆலமரம் திடீரென வேரோடு சாய்ந்தது. அருகிலிருந்த மாருதி காரின் மீது விழுந்தது. காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. ஆனால் கார் அப்பளமாக நொறுங்கிப் போனதில் ஏராளமான பொருட்ச்சேதம். வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டம் நொறுங்கிக் கிடந்த காரை பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டே பயணித்துக்கொண்டிருந்தனர்.

வீழ்ந்துகிடந்த மரத்தின் ஒரு பக்கத்தில் நொறுங்க்கிய கார் கிடக்க, எனது பார்வை மரத்தின் மறுபக்கம் சென்றது. அங்கு அந்த மரத்தில் கூடு கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு காகத்தின் கூடு சிதைந்து கிடந்தது.பக்கத்தில் பறக்க இயலாத நிலையில் இரண்டு குஞ்சுகள். பெரிய காகம் எங்கே என என் கண்கள் தேடியது. என்னால் நம்பவே முடியவில்லை. சிதைந்து கிடந்த கூட்டில் இருந்த குச்சிகளை ஒவ்வொன்றாக எடுத்துச்சென்று பக்கத்து மரத்தில் புதிய கூட்டை கட்டிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த இரு காகங்களும் தன்னுடைய குஞ்சுகளையும் தூக்கிக்கொண்டு புதியக் கூட்டில் குடியேறின.
தன்னுடைய குடியிருக்கும் வீடே சிதைந்து போனபோதுகூட மனந்தளராமல் போராடும் குணம் காகங்களுக்கு எப்படி வந்தது?. மனிதருக்கு இந்த போராடும் குணம் பலருக்கும் காணப்படாதது ஏன்?. இரண்டு கேள்விகளுக்கும் எனக்கு பதில் தெரியவில்லை.
Previous Post Next Post