வாருங்கள் பள்ளிக்கு செல்வோம்.



அன்று சனிக்கிழமை.நாகர்கோவில் அருகே உள்ள பறக்கிங்கால் சென்றிருந்தேன். சுமார் 23 குழந்தைகள் பள்ளிச் செல்லா குழந்தைகள் அந்த தெருவில் இருந்தனர். குழந்தைகளிடம் பேசினேன். 

அவர்கள் பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை. ஆசிரியர் என்ற வார்த்தையை கேட்டாலே பயப்படுகின்றனர். வகுப்பில் நடத்தும் பாடம் மனதில் பதியவில்லை எங்கிறார்கள். பெற்றோர்களிடம் பேசினேன். ஓரு சில பெற்றோர்களை தவிர மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப தயாராக இருந்தனர்.அந்த தெருவில் பெரும்பாலான பெற்றோர்கள் பிச்சை எடுக்கும் தொழிலையும், திருடும் தொழிலையும் செய்து வருகின்றனர். சுமார் 10 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர்.
     இவர்களின் அடுத்த தலைமுறையாவது சராசரி மனிதர்களாக மாற, பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்த அவர்களுக்கு கல்வி அளிப்பது ஒன்றே ஒரே வழி என்பதில் சந்தேகம் இல்லை. பயமுறுத்தாத கல்வி முறையை அரசங்கமும், அன்பாக பாடம் நடத்தும் ஆசிரியரும் அதிகமான அளவில் உருவானால் மட்டுமே ஒரு சமூக மாற்றம் நடைபெறும்.
     1 ஏப்பிரல் 2010 முதல் அரசு அமுல்படுத்தியிருக்கும் அனைவருக்கும் கட்டயக் கல்விச் சட்டம் உண்மையில் பலனளிக்க  வேண்டும் என்றால் மாணவர்கள் விரும்பும் கற்றல் சூழ்நிலைகளை ஆசிரியர்க்ள் தங்கள் வகுப்பறைக்குள் கொண்டு வந்தால் தான் இயலும்.



Previous Post Next Post