குழந்தைகளின் விருப்பங்களை மதிப்போம்.



பெரம்பூர் இரயில் நிலையம் அருகில் இரவு 8 மணியிருக்கும். மோட்டார் சைக்கிளில் தன் மகளுடன் ஒரு தந்தை வந்திருந்தார்.

தன் மகளுக்கு சோளக் கஞ்சி வாங்கி கொடுத்தார். மகளுக்கு சோளக் கஞ்சி பிடிக்கவில்லை. வேண்டாம் என்றாள். தந்தை விடவில்லை. பிடிவாதமாக ஊட்ட முயன்றார். குழந்தை அழுதது. சுற்றியிருந்த மக்கள் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள் என்று சொல்லிப் பார்த்தார்கள். தந்தை பிடிவாதமாய் ஊட்டினார். குழந்தை முகத்தை திருப்பிக்கொள்கிறது. தந்தை குழந்தையை தன் கையால் அடிக்கிறார். அழுதுகொண்டே குழந்தை சோளக் கஞ்சியை குடிக்கிறது.
 குழந்தைகளின் விருப்பத்தை உணர்ந்துகொள்ளாத அந்த தந்தையின் பாசம் குழந்தையின் ஆழ் நிலை மனநிலையை பாதிக்கும் என்பதை அவர் உணரவில்லை. குழந்தைகளின் உரிமைகளை பெரியவர்கள் மதிக்கவேண்டும். அது அவர்கள் ஆளுமையை வளர்க்கும். எனவே, குழந்தைகளின் விருப்பங்களை மதிப்போம்.
   
Previous Post Next Post