தங்க மனசுக்காரன்.


           
     ஒரு பணக்காரன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தான்.தூரத்தில் இரண்டு ஆண்கள் புற்களைப் பறித்துத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்துக் காரை நிறுத்தி அவர்களிடம் விபரம் கேட்க,அவர்களும் வறுமையினால் புல்லைச் சாப்பிடுவதாகக் கூறினர்.


     ''சரி என்னோடு வீட்டுக்கு வாருங்கள்,''என இருவரையும் அவன் அழைத்தான்.இருவரும் தன மனைவி,குழந்தைகளை விட்டுவிட்டு எப்படி வருவது என யோசிக்க,ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அவர்களையும் வரச்சொல்லி அனைவரையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.''உங்களுக்குத் தங்கமான மனசு,''என அவர்கள் அனைவரும் வாயாரப் புகழ்ந்தார்கள்.''சந்தோசமா வாங்க,என் பங்களாவைச் சுற்றி மூன்று அடி உயரத்துக்கு நிறையப் புல் வளர்ந்திருக்கு.'' என்றான் அந்த தங்க மனசுக்காரன்.
Previous Post Next Post