உறுதிமொழி
üஅறையை விட்டு கடைசியாக வெளியேறும்
போது மின்விளக்கு மற்றும் மின்விசிறியின்
ஸ்விட்சை அணைத்துவிட்டுச் செல்வேன்.
üதொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக்
குறைத்து விளையாடும் நேரத்தை அதிகரிப்பேன்.
üபயன்பாட்டில் இல்லாமலிருக்கும்
மின்சார கருவிகளின் ஸ்விட்சை அணைத்துவிடுவேன்.
üமின்சார விளக்கில் படிந்திருக்கும்
தூசிகளை அகற்றி விளக்கின் வெளிச்சத்தை அதிகரிப்பேன்.
üதேவையான பொழுது மட்டும்
மின்விசிறியைப் பயன்படுத்துவேன்.
ü‘ஆற்றல் சேமிப்பாளர்கள்’ என்ற
அமைப்பை பள்ளியில் உருவாக்கி மின்சாரத்தை சரியான முறையில் பயன்படுத்துவேன்.
üஎனது மேஜையை ஜன்னலுக்கு அருகே
மாற்றி மின்விளக்குகளுக்கு பதிலாக இயற்க்கை வெளிச்சத்தை பயன்படுத்துவேன்.
üபடிக்கும் போது LED மேஜை மின்விளக்கை பயன்படுத்துவேன்.
üஎங்கள் வீட்டிலுள்ள குளிர்சாதனப்
பெட்டியின் வெப்பதினை 37-40 F
அளவில் இருக்குமாறு
வைத்துக்கொள்வேன்.
üமின் இழை குமிழ்களை மாற்றி CFL மின் குமிழ்கள் மற்றும் LED குமிழ்களை
பயன்படுத்துவேன்.
மாற்றுத்திறன்
மாணவர்கள்,
பகல்
நேர பாதுகாப்பு மையம்,நாகர்கோவில்