அங்கன்வாடியில் ஒருநாள்

"அங்கன்வாடியில் ஒருநாள்........"


இது நாகர்கோவில் நகர மையத்தில் அமைந்திருக்கும் ஒரு அங்கன்வாடி மையம்.நேற்று இந்த மையத்திற்கு சென்ற போது தான் இந்த காட்சியை காண நேர்ந்த்து. மூன்று குழந்தைகள் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தனர். அரை மணி நேரமாக நான் காத்திருந்தும் அங்கன்வாடி பணியாளர் என் கண்னுக்கு தென்படவில்லை. அங்குள்ள அங்கன்வாடி ஆயா சமையல் செய்துகொண்டு இருந்தார்.
அரசு இந்த மையங்களுக்கு ஏராளமான விளையாட்டு பொருட்கள், கணிதப் பெட்டி உபகரணங்கள் எல்லாம் வழங்கியுள்ளது. அது ஏதாவது அந்த வகுப்பறையில் இருக்கிறதா? என்று தேடிப் பார்த்தேன். எதுவுமே இல்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து (காலை 11 மணி) அங்கன்வாடி பணியாளர் மையத்திற்கு வந்திருந்தார்.

     அவரிடம் உங்களுக்கு அரசிடமிருந்து குழந்தைகளுக்கு பயன்படுத்த விளையாட்டு பொருட்கள் தந்திருந்தார்களே அவைகள் எங்கே என்று கேட்டேன். அதற்க்கு அவருடைய பதில் இந்த மையத்திற்க்கு அங்கன்வாடி பணியாளர் இடம் காலியாக உள்ளது. நான் இப்போது பொறுப்பில் இருக்கிறேன் என்று பொறுப்போடு பதில் கூறினார். மேலே ஒரு பெட்டி இருந்த்து. இதை திறக்கச் சொன்னேன். அதில் சில உடைந்த பந்துகளும்,பெட்டிகளும், பிளாஸ்டிக் பொருட்களும் இருந்தன. விளையாட்டு பொருட்கள் இருந்தால் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுங்கள் என்றேன்.அந்த அங்கன்வாடி பணியாளர் கொடுத்த விளையாட்டு பொருட்களை தான் படத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள்.
     இப்படி ஒரு பொறுப்பில்லாமல் இருந்தால் அங்கன்வாடி மையங்களுக்கு பெற்றோர்கள் எப்படி அனுப்புவார்கள். அருகிலிருந்த துவக்கப் பள்ளியிலிருந்து மதியம் வரை இந்த அங்கன்வாடி மையத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு பாடம் கூட சொல்லிக்கொடுக்கப் படவில்லை. இப்படி நமது அரசு நிறுவனங்கள் இருந்தால் மக்கள் தனியார் நிறுவனங்களை தேடிச் செல்வதில் ஆச்சிரியமில்லை.
     எனக்குள் சில் கேள்விகள். நம் முன் சில் குழந்தைகள். அவர்கள் கண்களில் கற்கும் ஆர்வம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு எதாவது சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த அங்கன்வாடி பணியாளருக்கு ஏன் வரவில்லை?. என்னுடைய குழந்தை விளையாட இந்த மாதிரி ஒரு விளையாட்டுப் பொருட்களை எடுத்துக் கொடுப்பேனா?  என்னுடைய வேலை இது. நான் இதை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது ஒருவருக்கு வரும்?


Previous Post Next Post