ஒரு காலத்தில் ஒரு ஆமை மற்றும் முயலுக்கிடையே
யார் வேகமாக ஓடுவார்கள் என்ற ஒரு வாக்குவாதம் வந்தது. அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயம் நடத்தி யார் வேகமானவர்கள் என தீர்மானிக்க முடிவு செய்தார்கள்.
அந்த
போட்டியை காண ஏராளமான காட்டு விலங்குகளும்நாட்டு விலங்குகளும் வந்திருந்தனர். ஆமை
மற்றும் முயல் மைதானத்திற்கு வந்தனர். போட்டி தொடங்கியது. முயல் மிகவும்
வேகமாக ஓடியது. மூன்றில் ஒரு பகுதி தூரத்தை கடந்த
முயல் திரும்பி பார்த்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆமையை காணவில்லை. ஆமை
வந்து சேர்வதற்க்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்று நினைத்த
முயல் சில நேரம் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என நினைத்தது. மரத்தின்
கீழ் அமர்ந்து ஓய்வெடுத்த முயல் விரைவில் தூங்கிவிட்டது. ஆமை மெதுவாக வந்தாலும் சீரான வேகத்தில்
வந்தது. ஆமை சீராக
ஒடியதால் முதலில் வெற்றிக் கோட்டை தாண்டியது.
விழித்துப் பார்த்த முயல்
தான் தூங்கியதால் தோற்றதை உணர்ந்தது. முயலுக்கு சோம்பல்
வந்ததால் தான் இலக்கை அடவதற்கு முன் தூங்கத்தொடங்கியது. தோல்வி
அடைந்தது சோம்பல் ஒரு
பழக்கம். படிந்து விட்டால் நீக்குவது மிகவும் கடினம். இளம் வயதிலேயே சோம்பலற்று
இருக்க கற்றுக்கொண்டால் தோல்வியை சந்திக்க நீங்கள் விரும்மினாலும் தோல்வி உங்களை
சந்திக்க விரும்பாது.
தூக்கம் , தோல்வி இரண்டும்
ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள். ஒன்று
ஒட்டிக்கொண்டால் மற்றதும் ஒட்டிக்கொள்ளும்.
தோல்வி வாழ்வில் பழக்கம் ஆனால் சோம்பல் தானாகவே பழக்கமாகிவிடும். அது
போன்று சோம்பல் நம்முடைய உடம்புக்குள் புகுந்தால் தூக்கம் தானாகவே உடம்புக்குள்
புகுந்து விடும்.
“நல்ல
பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார். சிலர் அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்
கொண்டார். விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார். உன்போல் குறட்டை
விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்.” என்ற
கவிஞர் பட்டுக்கோட்டையார் அவர்களுடைய பாடலும் இதைத்
தான் சொல்கிறது.
சோம்போறி
பிணத்தைக் காட்டிலும் மோசமானவன். பிணம் மற்றவர்களை
உபத்திரவிப்பதில்லை. சோம்பேறியோ
யாரையெல்லாம் சார்ந்து இருக்கிறானோ அவர்களுக்கெல்ல்லாம் பெரும் பாரமாகவும் உபத்திரவமாகவும் இருக்கிறான். பிணம் எதையும்
எதிர்பார்க்காது. ஆனால் சோம்பேறிக்கோ அடுத்தவர்களிடம் நிறைய எதிர்பார்ப்புக்கள்
இருக்கிறது. முயலைப் போல சோம்பேறியாக இருக்காமல் ஆமையைப்போல சீரான வேகத்தில்
நம்முடைய இலக்கை நோக்கி சென்றால் நிச்சயமாக நம்முடைய இல்க்கை அடைந்து விடலாம்
என்பதே இந்த கதையின் கரு. முயலுக்கும் ஆமைக்கும் இடையே உள்ள ஓட்டபந்தயம்
முடியவில்லை. தொடர்கிறது.
அடுத்த
வருடமும் போட்டி நடை பெற்றது. முயல் வேகமாக ஓடியது. அது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம்
என்று மனதுக்குள் நினைத்தது. சென்ற வருடம்
போல இந்த வருடமும் தோல்வி அடையக்கூடாது என்ற எண்ணம் முயலுக்கு இன்னும் வேகமாக
ஓடுவதற்கான ஆற்றலை கொடுத்தது. பின்னால் வந்துகொண்டிருந்த ஆமையோ எப்படியும் சென்ற
முறை மாதிரி முயல் இந்த முறையும் தூங்கிவிடும், தான் வெற்றிபெற்று விடலாம் என்று
எண்ணிய வாறு வேகமாக இலக்கை நோக்கி நடந்தது. விழிப்பாய் இருந்த முயல் ஆமை கால்
பகுதி தூரம் வருவதற்குள் முழு தூரத்தையும் கடந்து வெற்றி பெற்றது. நம் வாழ்வில் நமது
சோம்பல், நேரத்தை சரியாக நிறுவகிக்க தெரியாமை, திட்டமிட்டு செயல்படாமை போன்ற பல
காரணங்களால் முயலைப் போலத் தோற்றிருக்கிறோம். ஆனால் முயல் தோல்வியிலிருந்து மீண்டெழுந்த
மாதிரி நம்மில் எத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறோம். புதிய முயற்சிகளை
மேற்கொண்டுள்ளோமா?சற்று சிந்திப்போம். வீழ்வது இயல்பு. வீழ்ந்த பின் அதே நிலையில்
இருக்காமல் வீறு கொண்டு எழவேண்டும்.
தோல்வியைப் பற்றி சிந்திப்பதை விட
தோல்விக்கான காரணத்தை அறிந்து அடுத்த
தடவை அந்த தோல்வி ஏற்படாதவாறு நம்முடைய செயல்திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். போட்டி
முடியவில்லை. அடுத்த வருடமும் தொடர்கிறது.
இப்போது
ஆமை யோசிக்க ஆரம்பிக்கிறது. முயல் வேகமாக ஓடக்கூடியது. அது எவ்வளவு தான்
முயற்ச்சியெடுத்து ஓடினாலும் முயலை விட வேகமாக ஓடி வெற்றி பெற இயலாது. ஆமை முயலை
எப்படியாவது வெற்றிகொள்ள நாட்கணக்காய் சிந்தனை செய்தது. அதற்க்கு
ஒரு புதிய சிந்தனை தோன்றியது. ஆமை நேராக முயலிடம் சென்றது. இந்த வருடமும் போட்டியை
நடத்துவோம். ஆனால் போட்டியை
வேறு இடத்தில் வைத்துக்கொள்ள ஆமை கேட்டுக்கொண்டது. முயலும் விழிப்புடன் இருந்ததால் எந்த
சூழ்நிலையிலும் ஆமை தன்னை தோற்க்கடிக்க முடியாது என்ற அசைக்க முடியாத
நம்மிக்கையில் போட்டிக்கு சம்மதித்தது.
இந்த முறை ஆமை சொன்ன பாதையில் ஒரு ஆறு
இருந்தது. போட்டிக்கான
இலக்கை ஆமை ஆற்றுக்கு மறுகரையில் இருந்தது. முயல் வேகமாக ஓடி
ஆற்றை அடைந்தது. முயலால் ஆற்றை கடக்க இயலவில்லை. ஆமை மெதுவாக வந்தாலும் ஆற்றை
விரைவாக கடந்து இலக்கை எட்டியது. இந்தமுறை ஆமை வெற்றி பெற்றது. நாம் தோல்வி
அடையும் போது ஆமை போன்று புதிய உத்திகளை தேர்ந்தெடுக்க கற்றுகொள்ளவேண்டும். நாம் வழக்கமான பாதைகளில் சென்றால் ஜெயிக்க
இயலாது என்ற நிலை வரும் போது வேறுபாதைகளை தேர்ந்தெடுக்க புது புது உத்திகளை நாம்
உருவாக்க வேண்டும். ஒரு இலக்கை அடைய ஒரே ஒரு பாதை தான் உள்ளது என்று நம்
எண்ணங்களில் சிந்தனைகளில் உருவானால் அதனை நாம் சிதறடிக்க் வேண்டும். இலக்குகளை
அடைய பல்வேறு பாதைகளை நாம் வகுத்து அதில் எந்த பாதையில் சென்றால் அடுத்தவர்களுக்கு
சிரமம் கொடுக்காமல் வெற்றிபெற இயலும் என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.
முயலுக்கும் ஆமைக்கும் இடையே உள்ள
போட்டி முடியவில்லை. அடுத்த வருடமும் தொடர்ந்தது. இந்த வருடமும் அதே பாதை. வழியில்
ஆறு. இப்போது முயல் சிந்தித்தது. அது நேராக ஆமையிடம் சென்று நாம் இப்படி போட்டி
போட்டுக்கொண்டிருந்தால் மாறி மாறி ஜெயித்துக்கொண்டே இருப்போம். நாம் வெற்றி தோல்வியை
பற்றி நினைப்பதை விட மிகக் குறைந்த நேரத்தில் இருவருமே இலக்கை எப்படி அடைவது பற்றி
சிந்திப்போம் என்றது.
ஆமையும் முயலின் யோசனையை
ஏற்றுக்கொண்டது. இந்த முறை ஓடும்போது
ஆறுவரை முயல் ஆமையின் முதுகில் ஏறியது. முயல் வேகமாக சென்றது. ஆற்றை கடக்கையில்
முயல் ஆமையின் முதுகில் ஏறியது. முயல் ஆற்றை வேகமாக கடந்தது. ஆற்றை கடந்ததும்
மறுபடியும் ஆமை முதுகின் மீது ஏறிக்கொண்டது. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் வெற்றி
பெற்றனர்.
குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்து நேரத்தை நிர்வகிக்கும் திறனையும்
பெற்றனர். இதை தான் நாம் குழு செயல்பாடு என்கிறோம். எந்த செயலையும் தனியாக செயல்
படுவதை விட ஒரு குழுவாக செயல் படும் போது கிடைக்கும் வெற்றியின் அளவு கண்டிப்பாக
மிகப் பெரிய அளவில் தான் இருக்கும்.
நாம் குழுவாக செயல்படும் போது குறைந்த
நேரத்தில் இலக்கை அடைவதோடு, நமது உழைப்பையும் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு
கிடைக்கிறது.குழுவாக செயல்படும் போது வேலை பாதியாகிறது. வெற்றி இரண்டு
மடங்காக்கிறது.







