சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளை நிறுவ டெல்லியில
மின்வினியோகம் செய்யும் தனியார் நிறுவனங்கள் (டிஸ்காம்) ஆர்வம் காட்டுகின்றன.
டெல்லியில் மின் வினியோகத்தை தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஆனால்,
மின் வினியோகத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. மேலும்
மின் தட்டுப்பாடு என்பதும், மின்சப்ளை ரத்து என்பதும் டெல்லியில் தொடர் கதையாகிவிட்டது.
ஹட்சன் பகுதியில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி ஆலையில் கடந்த 2008ம் ஆண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கேசவபுரம்,
நரேலா, பவானா உட்பட 8 இடங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
மொத்தம் 1.25 மெ.வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும்,
3 இடங்களில் சூரிய
மின்சக்தி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அரசு அடுத்த மாதம்
ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கிடைதத்துவிட்டலா,
இந்த ஆண்டு இறுதிக்குள் 1.91 மெ.வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தர்புரியில் 48.6 கி.வாட், ரோகினியில் 50கி.வாட், ஷாசதாவில் 60 கி.வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய அடுத்த மாதம்
ஒப்புதல் கிடைக்கும். அத்துடன், ரோகினியில் உள்ள என்.டி.பி.எல். அலுவலகத்தில் 250கி.வாட், பீதாம்புராவில் 225கி.வாட் சூரிய சக்தி மின்சாரமும் உற்பத்தி செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது. இவையனைத்தும் என்.டி.பி.எல்,. தன் சொந்த செலவிலேயே அமைத்துள்ளது. இவ்வாறு என்.டி.பி.எல்
நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு டெல்லியின் தேவைக்கு ஏற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை
என்பதுதான் முக்கிய காரணம். இந்த நிலையில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளை அதிகளவில்
நிறுவ டிஸ்காம்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. வடக்கு மற்றும் வடமேற்கு டெல்லி
பகுதிகளில் மின் வினியோகம் செய்யும் டாடா வின் என்.டி.பி.எல். நிறுவனம் இது பற்றி
கூறியதாவது:
