அமெரிக்காவின் மீது 2001 செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களுக்கு காரணகர்த்தாவாக, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டார். கடந்த 2001ஆம் ஆண்டுத் தாக்குதலுக்குப் பிறகு பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்கா பின்லேடனை கண்ணில் எண்ணையை விட்டு தேடியது. தற்போது அவர் அவர் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தெரியவந்ததும், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டது.
பாகிஸ்தானின் அப்போட்டாபாதில் உள்ள ஒரு வீட்டில் பின்லேடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அவர் மீது தாக்குதல் நடத்த உகந்த நேரம் தீர்மானிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டதாக ஒபாமா தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளில் அத்துமீறி நுழைந்து அந்நாட்டு மக்களையும் அவர்களின் சுதந்திரத்தையும் அவர்கள் அனுமதியின்றி அநாகரீகமாக கண்காணிக்கும் ஓபாமின் அமெரிக்க அரசை யார் கண்காணிப்பார்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்த யார் அனுமதி கொடுப்பார்கள்.
உள்ளூர் நேரப்படி 1.05.2011 இரவு 1.30 மணியளவில் இஸ்லாமாபாதில் இருந்து 100 மைல்கள் தொலைவில் உள்ள அப்போட்டாபாதுக்குள் 2 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அதிரடியாகச் சென்று தாக்குதல் நடத்தின. இறுதி வரை போராடியுள்ளார் பின்லேடன். மரணத்தை சந்தித்தபோதும் கூட அவர் எதிரிகளை தாக்கியுள்ளார். எனவே அவர் கெளரவமான மரணத்தையே தழுவியுள்ளார். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் நடைபெற்ற தரைவழித் ஒரு வாரம் முன்பே தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும் DNA சோதனை மூலம் அதனை உறுதிப்படுத்துவதற்காகக் அமெரிக்கா ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
ஒரு கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த மிகச் சிறந்த ஒரு பொறியாளர். தான் விரும்பியிருந்தால் தங்கக் கட்டிலில் படுத்து உறங்கலாம். ஆனால், தன் வாழ்வில் மிகமிக எளிமையாகவே வாழ்ந்த உன்னதமானவர். தனிப்பட்ட முறையில் ஒசாமா ஒரு அமைதியான , சாந்தமான மனிதர் என்பது அவருடைய வரலாற்றை படித்தவர்களுக்கு புரியும். சூடான் மக்களுக்காக தன் சொந்த பணத்திலிருந்து அவர்களின் வாழ்க்கை மேம்பட உழைத்தவர். அவரின் உண்மையான முகத்தை மறைத்து விட்டு உலகிலேயே படுபயங்கரமான நபராக அமெரிக்காவும் அவரது அல்லக்கை நாடுகளும் சித்தரித்து விட்டது.
2001 செப்.11 தாக்குதலுக்குக் காரணமான பின்லேடனைப் பிடித்து தண்டனை வழங்குவோம் என்று உறுதியாகச் செயல்பட்டார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். ஆனால், தற்போதய அமெரிக்க அதிபர் ஒபாமா, அதில் வெற்றி பெற்றார். அண்மைக் காலமாக அமெரிக்க மக்களிடையே சிறிது சிறிதாகச் சரிந்துவரும் தன் செல்வாக்கை, இந்த வெற்றியின் மூலம் சரிசெய்ய நினைத்தார்.அமெரிக்கா என்றவுடனேயே பயத்தில் தொடை நடுநடுங்கி கூழைக் கும்பிடு போடும் சில நாடுகள். அமெரிக்காவிடம் கூட்டுவைத்துக் கொண்டால் தான் நம் நாட்டை காப்பற்ற இயலும் என அவர்களிடம் மண்டியிட்டு கிடக்கும் நாடுகள் பல. இந்த சூழ்நிலையில் இவ்வுலகில் ஒரு தனி மனிதாக இருந்து கொண்டு அமெரிக்காவின் தூக்கத்தை கலைத்த அவர் உண்மையிலேயே ஒரு போராளிதான்.
தனது எதிரியை நேரடியாக சந்திக்க துணிவு இல்லாத அமெரிக்கா, ஒசாமா பின்லேடன் என்ற ஒரு அப்பாவி தனி மனிதனுக்கு உதவுவதுபோல் நேரடியாகவும் மறைமுகமாகவும் எல்லா உதவிகளும் செய்ததை அமெரிக்கா மறுக்க முடியுமா?, தனது காரியம் முடிந்த உடனேயே, தான் போற்றி - பொத்தி வளர்த்த அந்த நபரை தீவிரவாதியாக சித்தரித்து. தற்போது கொன்று விட்டது. இதுதான் அமெரிக்காவின் வீரம். ஈராக்கில் சதாம் ஹூசைன் கொல்லப்பட்டதும் இதே காரணங்களுக்காகத்தான். அமெரிக்கா நன்றி இல்லாத கொடிய கொலைகாரன். தீவிரவாதிகளை அவர்களே உருவாக்கி விடுவார்கள். பின் அவர்களே அவர்களை கொன்று விடுவார்கள்.
ஒசாமாவினால் கொல்ல்ப்பட்ட மக்களை விட அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களே அதிகம். ஒசமாவிற்கு துப்பக்கிகுண்டுதான் பரிசு என்றால் ஒசாமாவிற்கு ஆயுதம் / பணம் கொடுத்து பயிற்சி அளித்தது தீவிரவாதியாக்கியவர்களான அமெரிக்கர்களுக்கு என்ன பரிசளிப்பது. தனது நேரடி எதிரியான ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, தன்னை தட்டிக் கேட்க உலகில் யாருமில்லை என்ற ஆணவப் போக்கு அமெரிக்காவிற்கு அதிகம். ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவை எதிர்க்க ஒசாமாவிற்கு கொம்பு சீவி விட்டதே அமெரிக்கா தான். அல் கொய்தாவை நிறுவியதற்க்கு முதற்காரணம் அமெரிக்காவின் அத்துமீறல் தான்.
