அந்த தேநீர் கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். எனக்கு அருகில் இருந்த ஒருவர் தேநீரை குடித்து முடித்ததும் தான் குடித்தஅந்த தேநீர் கோப்பையை தூக்கி வீசுகிறார்.
அது பக்கத்திலுள்ள சாக்கடையில் விழுகிறது. சாக்கடையில் திரும்பிப் பார்த்தேன். ஏராளமான பிளாஸ்டிக் கோப்பைகள். பெரும்பான்மையானோர் தேநீர் அருந்திவிட்டு தேநீர் கோப்பையை சாக்கடையில் வீசியிருக்கிறார்கள். சாக்கடையில் விழுந்த தேநீர் கோப்பைகள் ஓடிக்கொண்டிருந்த சாக்கடை நீரை தேங்கச்செய்கின்றன.
சில கோப்பைகளில் சாக்கடை நீர் தேங்கியிருந்தன. அவைகள் கொசுக்களின் பிறப்பிடங்களாக இருந்தன.அந்த இடத்தில் சாக்கடை நீரில் மிதந்து வந்த குப்பைகள் செல்ல இயலாமல் தேங்கிக்கிடந்தன.தேங்கிக்கிடக்கும் எல்லா பொருளும் நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டவை.தேங்கி நிற்கும் நீர் சாக்கடை. தேங்கி நிற்கும் சாக்கடை மலேரியா போன்ற நோய்களை உருவாக்கும். நம் மனதில் எண்ணங்களை தேக்கினால் மன நோய் உருவாகும். ஓடும் தண்ணீரை தேக்கினால் உடல் நோய் உருவாகும். எனவே எந்த வகை குப்பைகளையும் தேங்கி தேங்கி நிற்க்காமல் பார்த்துக்கொள்வது நமது கடமை.
இந்த படம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இராஜாக்கமங்கலம் என்ற ஊரில் எடுக்கப்பட்டது.இங்கே குப்பைகளை போடாதீர்கள் என்ற அரசு உத்தரவை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. குப்பைகளை சரியான முறைகளில் மேலாண்மை செய்வதை விட குப்பைகளை உருவாக்காமல் பூஜ்ஜிய கழிவு திட்டத்தை செயல்படுத்துவது நல்லது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவரும் பூஜ்ஜிய கழிவு திட்டத்தை செயல்படுத்த ஏராளமான செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.நாமும் அவருடன் சேர்ந்து பூஜ்ஜிய கழிவு திட்டத்தை செயல் படுத்துவோம்.