பூமி தினம்


இன்று ஏப்ரல் 22ம் திகதி 'பூமி' தினத்தை (Earth Day) முன்னிட்டு கூகுள் தனது டூடிள் சின்னத்தை அழகிய இயற்கை வளங்களுடன் கூடிய அனிமேஷன் காட்சியாக மாற்றியமைத்திருக்கிறது.

முதலாவது பூமி தினம் 1970ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் திகதி கேய்லோர்ட் நெல்சன் எனும் அமெரிக்க செனெட்டரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய முதல் பூமி தினத்திற்கு 20 மில்லியன் அமெரிக்கர்கள் ஒன்று திரண்டனர். சர்வதேச ரீதியாக, 1990ம் ஆண்டு சுமார் 175 நாடுகள் பூமி தினத்தை கொண்டாடின. எனினும், ஏப்ரல் 22ம் திகதி பூமிதினத்தை கொண்டாடவேண்டுமென, 2009ம் ஆண்டு தான், ஐக்கிய நாடுகள் சபையினால்  உத்தியோகபூர்வமாக  அறிவிக்கப்பட்டது.
பூமியின் சுற்றுப்புற சூழல் தொடர்பான விழிப்புணர்வுக்காக கொண்டாடப்படும், இவ்வருடத்திற்கான பூமி தினத்தில், சுற்றுப்புற சூழலை ஆரோக்கியமாக பேணிவளர்ப்பதற்காக முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு வாய்ப்பளித்து அவற்றை நிறைவேற்ற முனைவோருக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டுமென கோரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டு, பூமி தினத்தின் 40 வது ஆண்டு பூர்த்தி கொண்டாடப்பட்டது.சில நாடுகளில், தொடர்ந்து இரண்டுமூன்று நாட்களாக அல்லது வாரக்கணக்கில் இப்பூமிதினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஏப்ரல் 16 ம் திகதியே பூமிதினத்திற்கான திட்டங்கள் முன்னெடுக்க தொடங்கிவிடும்.
1990 ம் ஆண்டு பிரபல போப் பேண்ட் இசைக்கலைஞர் ட்ராமரம்மா, அவ்வருடத்திற்கான பூமிதினத்திற்காக வெளியிட்ட What are we gonna do? எனும் பாடல் இன்றுவரை பிரபலமாக திகழ்கிறது. கடந்த மார்ச் 20ம் திகதி The Equinox Earth Day' எனும் தினம் கொண்டாடப்பட்டது. இது மேற்குலக நாடுகளில் இளந்தளிர் காலத்தை வரவேற்கும் முதல் நாளாகவும், தெற்குலக நாடுகளில் இலையுதிர் காலத்தை வரவேற்கும் முதல் நாளாகவும் கொண்ட்டாடப்படுகிறது.
Previous Post Next Post