ஓட்டுநர் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும் போது ஏதோ காரணமாக வண்டி பாதையை விட்டு விலகிச் சென்றால் அவர் மிக விரைவாக வண்டியினை சாலைக்குள் மீண்டும் கொண்டுவர முயலுவார். இவ்வாறு மீண்டும் மீண்டு தன் பழைய நிலைக்கு வருவதை இயற்பியலில் “மீட்சித்திறன்” என்று கூறுவார்கள். அதிக நெகிழும் தன்மை நிறைந்த பொருட்கள் விரைவில் பழைய நிலைக்கு திரும்பிவிடும்.
இந்த மீட்சித்திறன் சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும். ஒரு சிலர் தேர்ந்த ஓட்டுநர்களாகி விலகிப் போன வண்டியை மிக விரைவாகவே சாலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். மற்றவர்களோ பழைய நிலைமைக்கு திரும்புவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வர்.
பஞ்ச பூதங்களின் மீட்சி நிலையைப் பார்க்கும் போது நிலத்திற்கு மீட்சித் திறன் மிகவும் குறைவு. நிலத்தில் கோடு ஒன்றைப் போட்டால் அது மறைந்து பழைய நிலைக்கு வருவதற்கு நாளாகும். தண்ணீரின் மீட்சித்திறன் நிலத்தின் மீட்சித் திறனை விட பலமடங்கு அதிகம். நீரில் ஒரு கோடு போட்டால் அடுத்த நிமிடமே தன் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
காற்றில் வரையும் கோடு காற்றை பிரித்தாலும் கணநேரம் தான் அந்த கோடு இருக்கும். நெருப்பும் காற்று மாதிரி அதிக மீட்சித் திறன் உடையது. ஆகாயத்தில் கோடு போட்டால் கூட பார்க்கமுடியாத படி அதன் அதன் மீட்சித்திறன் மிகவும் அதிகம்.
இந்த மீட்சித் திறன் நமக்கும் இருக்கிறது. நம் எண்ணங்கள் நிலத்தைப் போல பொருள் சார்ந்த இயல்போடு இருந்தால் மீட்சித் திறன் குறைவாக இருக்கும். உதாரணமாக இவ்வுலக பொருட்களினால் நம் மனதை நிரப்பும் போது அந்த பொருளானது தொலைந்து போகும் போதோ , பழுதடையும் போதோ பழைய நிலைமைக்கு திரும்புவது மிகவும் கடினமாக இருக்கும்.
ஆனால் நல்ல சிந்தனைகளால் நம் மனதை நிரப்பி வைத்திருந்தால் அத்துமீறி நுழையும் சஞ்சலங்களை விட்டு மனம் வெகு வேகமாக பழைய நிலைமைக்கு வந்துவிடும். நமது மனதை நல்ல எண்ணங்களால் நிறைத்து வைத்திருக்கும் போது நமக்கு மீட்சித் திறன் அதிகமாக இருக்கும்.
நமது மீட்சித் திறனை அதிகரித்து அழையா விருந்தாளிகளாக வரும் குழப்பங்களுக்கு விடைகொடுப்போம்.