குழந்தைகளுக்கு, தாய்ப்பாலுக்கு இணையான உணவு எதுவுமே இல்லை. பிசியான சூழலில் முன்பை விட, தற்போது தாய்மார்களுக்கு தாய்ப் பாலின் சுரப்பு அளவு குறைகிறது. தாய்ப்பால் தர முடியாத குழந்தைகளுக்கு, பசும்பால் பரிந்துரை செய்யப்படுகிறது.
தாய்ப்பாலில், லைசோசெம் என்ற புரதச்சத்து உள்ளது. இந்த புரதச்சத்து தான், பாக்டீரியா மூலம் ஏற்படும் நோய்களை எதிர்க்கும் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது. தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் திகழ்வர் என்பதற்கு, இந்த லைசோசெம் தான் காரணமாகும். பசுவின் பாலில் இந்த லைசோசெம் இருப்பது இல்லை. தற்போது மரபணுப் பொறியியல் தொழில் நுட்பத்தின் அடிப்படையில், தாய்ப்பாலின் சிறப்பு அம்சங்கள் உள்ள பசும்பாலைத் தரும் வகையில் பசுக்களுக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுக்கள் தற்போது சீனாவில் உள்ளன. இந்த பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது தற்போது ஆராய்ச்சியில் உள்ளது.
பசுவைப் பாதுகாக்க, வட மாநிலங்களில் இயக்கங்கள் உள்ளன. ஆனால் பசுக்கள் மனிதர் களுக்கு தருகின்ற பாதுகாப்பு குறித்து, புதிய செய்திகள் வந்து கொண்டே உள்ளன. பசுக்களின் உடலின் பின்பகுதியில் சூரிய கேது என்ற நரம்பு உள்ளது. இது சுற்றுப்புறத்தில் உள்ள தீமை தருகின்ற கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொண்டு சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கிறது. இதனால் தான் இந்து சமய மரபில், பசுக்களை வணங்கும் கோபூஜையில், பசுவின் பின்புறத்தை வழிபடு கின்றனர். யாக குண்டத்தில், தூய்மையான பசு நெய் ஊற்றப்படுவதால் எழுகின்ற புகை, நமது ஓசோன் மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கில் உள்ள பசுப்பாதுகாப்பு இயக்கம் பசுஞ்சாணம் மற்றும் கோமியம் எனப்படும் பசுவின் சிறுநீரைப் பயன்படுத்தி மருந்துகள், சோப்புகள் தயாரிக்கிறது. பசுஞ்சாணத்தில் இருந்து வருகின்ற காற்று அணுக்கதிர்வீச்சு எதிர்ப்புத் தன்மையுடன் உள்ளது. எனவே டைல்ஸ் மற்றும் டிஸ்டம்பர் தயாரிப்பில் பசுஞ்சாணம் பயன்படுகிறது.
